தென் கொரியாவில் அதிக வேலைப்பளு மற்றும் தூக்கமின்மையால் அவதிப்படும் மக்களுக்காகத் ‘தூக்கப் போட்டி’ என்ற ஒரு விசித்திரமான போட்டி நடத்தப்பட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்தப் போட்டியில் பங்கேற்பாளர்கள் உண்மையிலேயே ஆழ்ந்து தூங்குகிறார்களா என்பதைச் சோதிக்க, அவர்கள் தூங்கும்போது லேசாக இறகுகளால் உரசுவது மற்றும் இதயத்துடிப்பைப் பரிசோதிக்க நவீனக் கருவிகளைப் பொருத்துவது என மிகவும் சீரியஸாக இந்தப் போட்டி நடைபெற்றது.
இதில் பல இளைஞர்கள் மல்லுக்கட்டிய நிலையில், 80 வயது முதியவர் ஒருவர் மிக அமைதியாகத் தூங்கி முதற்பரிசைத் தட்டிச் சென்றது அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
தூக்கத்தை ஒரு போட்டியாக மாற்றி, அதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்க அந்த நாட்டு அரசு எடுத்த இந்த அதிரடி முயற்சி இப்போது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.
