ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், சீனா எடுத்துள்ள ஒரு அதிரடி முடிவு உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானுடன் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் கூறி சீனாவின் பெட்ரோகெமிக்கல் நிறுவனங்கள் மீது அமெரிக்கா கடுமையான தடைகளை விதித்தது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்காவின் இந்தத் தடைகளைச் சீன நிறுவனங்கள் எக்காரணம் கொண்டும் பின்பற்றத் தேவையில்லை எனச் சீன வணிக அமைச்சகம் சனிக்கிழமை அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது.
தனது நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் நிறுவனங்களின் சட்டப்பூர்வ உரிமைகளைப் பாதுகாக்கவே இந்த ‘தடை உத்தரவு’ (Blocking Statute) பிறப்பிக்கப்பட்டுள்ளதாகச் சீனா விளக்கமளித்துள்ளது.
ஈரானுடன் தங்களுக்கு நீண்டகால வர்த்தக உறவு இருப்பதாகவும், அதை யாராலும் தடுக்க முடியாது என்றும் சீனா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியைப் பாதுகாக்க அமெரிக்கா உதவி கோரியும், சீனா இந்த விவகாரத்தில் இருந்து விலகி நிற்க முடிவு செய்துள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் ஒரு ‘நேருக்கு நேர்’ மோதல் உருவாகியுள்ளது.
