நடிகை ஐஸ்வர்யா 1991 ஆம் வருடம் ஒளியம்புகள் என்ற மலையாள திரைப்படத்தின் மூலமா,க அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் நியாயங்கள் ஜெயிக்கட்டும், ஊரெல்லாம் உன் பாட்டு பொண்ணுக்கு செய்தி வந்தாச்சு, எஜமான், தங்கபாப்பா போன்ற படங்களில் நடித்திருந்தார். சூர்யா நடிப்பில் வெளியான ஆறு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா யூடியூப் சேனல் மூலமாக சோப்பு மற்றும் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்துவருகிறார். பொருட்களை வாங்குபவர்களுக்கு எளிதாக இருக்க வாட்ஸ் அப் எண்ணையும் யூடியூப்பில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அந்த எண்ணிற்கு பலர் ஆபாசமாக மெசேஜ் அனுப்புவதாக கூறி வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், நீங்க வயசானாலும் கும்முன்னு இருக்கீங்க, என கூறியவர்களுக்கு. ‘நான் 52 வயது கிழவிடா’ என பதில் கொடுத்துள்ளார்.