கும்பம் ராசி அன்பர்களே,

இன்று நல்லவர்களின் நட்பு ஏற்படும் நாள் என்றே சொல்ல முடியும். பேச்சிலும் செயலிலும் நிதானத்தை கடைப்பிடியுங்கள். கடந்த கால பிரச்சனைகள் ஓரளவு சரியாகிவிட்டது என்று நினைத்துக் கொள்ளுங்கள். தைரியமான செயல்பாடுகள் வெற்றியைக் கொடுக்கும். கருத்துக்களை பரிமாறும் போது கவனமாக இருங்கள்.

தேவையற்ற விஷயங்களில் நேரத்தை செலவிட வேண்டாம். வீண் விரயம் ஏற்படும். உணர்ச்சிவசப்படாமல் பேசுவது நல்லது. நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பண வரவு திருப்தியை கொடுக்கும். வெளியூர் பயணத்திற்கான திட்டம் வெற்றிபெறும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை சாதித்து விடுவீர்கள்.

இன்று மாணவர்களுக்கு உயர்ந்த எண்ணங்கள் கண்டிப்பாக வெளிப்படும். விளையாட்டுத்துறையில் சாதிக்க முடியும். வெளிஉலகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். பெற்றோர் சொல்  கேட்டு நடப்பது நல்லது. இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக  வைத்துவிட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: மூன்று ஐந்து மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்