தமிழகத்தில் ‘சம வேலைக்கு சம ஊதியம்’ கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 201 நாட்களுக்கும் மேலாக விடாமல் போராடி வந்தனர். இவர்களின் கோரிக்கையை ஏற்று, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்கள் இன்று ஆசிரியர்களுடன் நேரில் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த நீண்ட போராட்டத்திற்கு ஒரு நல்ல முடிவு கிடைக்கும் வகையில், ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான ஒரு அறிவிப்பை அமைச்சர் இன்று வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பின்படி, பகுதிநேர ஆசிரியர்களின் மாத ஊதியம் 2,500 ரூபாய் உயர்த்தப்படுகிறது. இதற்கு முன்பு 12,500 ரூபாயாக இருந்த இவர்களது சம்பளம், இனி 15,000 ரூபாயாக உயரும். சுமார் 200 நாட்களுக்கு மேலாக வெயிலிலும் மழையிலும் போராடிய ஆசிரியர்களின் போராட்டத்திற்கு இந்த சம்பள உயர்வு ஓரளவுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.
