கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை நிலையாக இல்லாமல் ஏறியும் இறங்கியும் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில், இன்று (ஜனவரி 14) தங்கம் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ. 110 உயர்ந்து ரூ. 13,280-க்கும், ஒரு சவரன் ரூ. 880 உயர்ந்து ரூ. 1,06,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் விலை உயர்வு, நகை வாங்கத் திட்டமிட்டிருந்த நடுத்தரக் குடும்பத்தினருக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

​தங்கத்தை விடவும் இன்று வெள்ளி விலை யாரும் எதிர்பாராத வகையில் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது. ஒரு கிராமுக்கு ரூ. 15 உயர்ந்து ரூ. 307-க்கும், ஒரு கிலோ வெள்ளிக்கு ஒரே நாளில் ரூ. 15,000 உயர்ந்து ரூ. 3,07,000-க்கும் விற்பனையாகிறது. தங்கம் மற்றும் வெள்ளி என இரண்டின் விலையும் போட்டி போட்டுக்கொண்டு உயர்வதால், இல்லத்தரசிகள் மற்றும் சாமானிய மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.