மத்திய இணை அமைச்சர் எல். முருகன் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் இன்று (ஜன. 14) நடத்திய பொங்கல் விழாவில், பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற இந்த விழாவில், அண்மையில் வெளியான ‘பராசக்தி’ திரைப்படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் நடிகர் ரவி மோகன் (ஜெயம் ரவி) உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். விழாவில் ஜி.வி. பிரகாஷின் திருவாசக இசை நிகழ்ச்சி பிரதமர் முன்னிலையில் நடைபெற்றது.
சங்கிகுழு பொங்கலில் பராசக்தி குழு😎
ஆன #JanaNayagan blocked 🚫 https://t.co/bnChFgJQta
— Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) January 14, 2026
“>
இந்நிலையில், இந்த நிகழ்வை விமர்சித்துப் பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், “சங்கிக் குழு பொங்கலில் பராசக்தி குழு… ஆனால் ஜனநாயகன் படம் பிளாக் (Blocked)” எனக் குறிப்பிட்டுள்ளார். விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்க மத்திய அரசு முட்டுக்கட்டை போடுவதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டி வரும் நிலையில், அதே மத்திய அமைச்சரின் விழாவில் மற்றொரு தமிழ்ப் படக்குழுவினர் பங்கேற்றது சமூக வலைதளங்களில் விவாதங்களை எழுப்பியுள்ளது.
