சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து சர்வை சந்தித்து வருகிறது. அந்த வகையில் இன்றும் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 880 வரையில் குறைந்து ஒரு சவரன் 55,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்பிறகு ஒரு கிராம் 6935 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 7440 ரூபாய்க்கும், ஒரு சவரன் 59 ஆயிரத்து 520 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் வரையில் குறைந்து ஒரு கிராம் 99 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 99 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தங்கம் விலை 4 நாட்களில் 2720 வரையில் குறைந்துள்ளது நகைப்பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
