இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் என்பது பொதுமக்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில் யுபிஐ பண பரிவர்த்தனைகள் என்பது சிறிய கடைகள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. பொதுமக்களுக்கு வங்கிக்கு செல்லும் தேவை குறைந்த யுபிஐ பண பரிவர்த்தனைகள் என்பது சுலபமாக இருப்பதால் பலரும் அதனை விரும்புகிறார்கள். பொதுவாக பணம் அனுப்பும்போது பின் நம்பர் அல்லது otp உள்ளிட வேண்டும்.

ஆனால் தற்போது இதனை சுலபமாகும் விதமாக முக பதிவு அல்லது கைரேகை பதிவு மூலமாக யுபிஐ வாயிலாக பணம் அனுப்பும் முறையை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளனர். பின் நம்பரை விட இது பாதுகாப்பானது என்பதால் NPCI இதனை சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தியது. மேலும் இந்த புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் இதன் மூலமாக 5000 ரூபாய் வரையில் அனுப்பலாம் என்று கூறப்படுகிறது.