மதுரையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அரசியலில் ஒழுக்கம் மற்றும் குடும்ப மாண்பு குறித்துப் பேசியது இப்போது பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
“ஒரு பொதுத் தலைவர் சமூகத்திற்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்; அவருக்குக் குடும்ப மாண்பும், ஒழுக்கமும் மிக முக்கியம்” என்று அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் – சங்கீதா தம்பதி குறித்துச் சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில், வைகோவின் இந்தப் பேச்சு விஜய்யை மறைமுகமாகக் குறிவைத்துத் தாக்கும் விதமாகவே இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
“கண்ணகியும், வேலுநாச்சியாரும் வாழ்ந்த மண்ணில் குடும்ப ஒழுக்கம் பாதுகாக்கப்பட வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியிருப்பது, புதிய கட்சி ஆரம்பித்துள்ள விஜய்க்கு விடுக்கப்பட்ட ஒரு ‘செக்’ ஆகப் பார்க்கப்படுகிறது.
திமுக கூட்டணியில் நீடிக்கும் வைகோ, விஜய்யின் அரசியல் வருகையைத் தொடர்ந்து அவரை இப்படி விமர்சித்துள்ளது தவெக தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
