தமிழக மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான தேதிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 15, 2026) அதிரடியாக அறிவித்துள்ளது.

கடந்த 30 ஆண்டுகளாகத் தமிழ்நாடும் புதுச்சேரியும் ஒரே தேதியில்தான் தேர்தலைச் சந்தித்து வந்தன. ஆனால், இந்த முறை அந்த நீண்டகாலப் பாரம்பரியம் உடைக்கப்பட்டு, இரண்டுக்கும் வெவ்வேறு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பொதுவாகப் பாதுகாப்புப் படைகளை நகர்த்துவதற்கும், தேர்தல் பணிகளைச் சீராக மேற்கொள்வதற்கும் தேர்தல் ஆணையம் இது போன்ற முடிவுகளை எடுக்கும்.

புதுச்சேரியில் ஏப்ரல் 9-ஆம் தேதியே தேர்தல் முடிந்துவிடும் என்பதால், அங்குள்ள பாதுகாப்புப் படையினரைத் தமிழகத் தேர்தலுக்கு (ஏப்ரல் 23) எளிதாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதே தேர்தல் ஆணையத்தின் ‘மாஸ்டர் பிளான்’ ஆகப் பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு – புதுச்சேரி என இரண்டு இடங்களிலும் தனது ‘தடம்’ பதிக்கக் காத்திருக்கும் தளபதி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், ஆளுங்கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் பாஜக என அனைத்துக் கட்சிகளுக்கும் இந்தத் தனித்தனி தேர்தல் தேதிகள் ஒரு புதிய சவாலாக அமைந்துள்ளது.