இந்தியாவின் 75 ஆவது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படும் நிலையில் கூகுள் நிறுவனம் புதுமையான டூடுலை உருவாக்கியுள்ளது. கருப்பு மற்றும் வெள்ளை தொலைக்காட்சிகள், கலர் டிவிகள் மற்றும் மொபைல்கள் இந்தியாவின் பெருமையை வெளிப்படுத்தும் டூடுல்களில் அடங்கும். குடியரசு தின அணிவகுப்பின்போது ராஷ்டிரபதி பவன், இந்தியா கேட், மத்திய ரிசர்வ் போலீஸ் படை அணிவகுப்பு பேண்ட் மற்றும் மோட்டார் சைக்கிள் ரைடர்ஸ் உள்ளிட்ட கலைப்படைப்புகளை இந்த டூடுல் சிறப்பித்துள்ளது.