இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் போலீஸ் செய்திகள் மிகவும் வேகமாக இணையதளங்களில் பரவி வருகின்றன. அதன்படி வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகள் உண்மை என நம்புவதால் பொய் பரப்புவோர் அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர்.

இந்த நிலையில் உலக அளவில் தவறான தகவல்களின் ஆபத்து அதிகமாக உள்ள நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை தவறான தகவல்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மிக அதிக அச்சுறுத்தலாக மாறும் என்று உலக பொருளாதார மன்றம் அதன் வருடாந்திர உலகளாவிய அபாயங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.