பொது மற்றும் சுகாதார காப்பீடு அட்டை வைத்துள்ளவர்கள் முன்பணம் செலுத்தாமல் இனி அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறலாம் என்று பொது காப்புறுதி கவுன்சில் அறிவித்துள்ளது. இந்த சேவைகள் நேற்று தொடங்கப்பட்ட நிலையில் பட்டியலில் இல்லாத மருத்துவமனைகளிலும் இந்த சேவைகளை பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள பல மருத்துவமனைகளில் முதலில் பணம் செலுத்தி சிகிச்சை தரும் முறை நடைமுறையில் இருந்து வரும் நிலையில் தற்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.