ஐதராபாத்தில் மார்க்கெட்டிங் மேனேஜராக வேலை பார்த்து வந்த சுதீர் ரெட்டிக்கும், அவர் மனைவி ஞான பிரசன்னாவுக்கும் இடையே ஒருவரையொருவர் சந்தேகப்படும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் தினமும் சண்டை, சச்சரவுதான்! சம்பவத்தன்று குடிபோதையில் வந்த சுதீர் ரெட்டி, மனைவியின் நடத்தையைப் பற்றித் தவறாகப் பேசித் தகராறு செய்துள்ளார். அவர் தூங்கிய பிறகு, ஆத்திரமடைந்த ஞான பிரசன்னா கயிறால் கணவரின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்துள்ளார்.
திட்டமிட்டு, கணவர் மது போதையில் கீழே விழுந்து இறந்துவிட்டார் என உறவினர்களை நம்ப வைக்க முயன்றார். ஆனால், சுதீர் ரெட்டியின் சகோதரி கொடுத்த புகாரால் போலீஸ் விசாரணையில் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. பிரேத பரிசோதனையில் அவர் கழுத்தை இறுக்கிக் கொல்லப்பட்டது உறுதியானதையடுத்து, ‘நடிப்பு’ காட்டிய ஞான பிரசன்னா இப்போது கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்!
