பாகிஸ்தானின் மிக முக்கிய மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான லாகூரில், பல முக்கியப் பகுதிகள் மற்றும் சாலைகளுக்கு மீண்டும் பழமையான இந்துப் பெயர்கள் சூட்டப்பட்டு வருவது உலக அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அங்குள்ள புகழ்பெற்ற ‘இஸ்லாம்புரா’ என்ற பகுதியின் பெயர், தற்போது அதிகாரப்பூர்வமாக மீண்டும் ‘கிருஷ்ணா நகர்’ என அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

​இதுபோன்று லாகூரின் பல்வேறு முக்கியப் பகுதிகள் மற்றும் சாலைகளின் பெயர்கள் பழமை மாறாமல் மாற்றப்பட்டு வருகின்றன. கடந்த 1947 பிரிவினை மற்றும் சுதந்திரத்திற்கு முன்பாக இந்த இடங்கள் எப்படி அழைக்கப்பட்டனவோ, அதே பெயர்களை மீண்டும் பயன்படுத்துவதன் மூலம், லாகூர் நகரின் உண்மையான வரலாற்றுச் சிறப்புகளையும் பாரம்பரியத்தையும் தொடர்ந்து கடைப்பிடிக்க முடியும் என அங்குள்ள நிர்வாகம் இந்த மாஸ் முடிவை எடுத்துள்ளது.