டென்னிஸ் கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னனாகத் திகழும் கிருஷ்ணா சத்புதே, மைதானத்தில் தனது அதிரடி ஆட்டத்தால் மட்டுமல்லாமல், தனது பெருந்தன்மையாலும் ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளார். சமீபத்தில் நடந்த போட்டி ஒன்றில், ஒரு இளம் பந்துவீச்சாளரின் ஓவரில் முதல் 5 பந்துகளையும் சிக்ஸர்களாகப் பறக்கவிட்டு அதிரடி காட்டினார். கடைசிப் பந்திலும் சிக்ஸர் அடித்து சாதனை படைக்க வாய்ப்பு இருந்தும், கிருஷ்ணா சத்புதே வேண்டுமென்றே அந்தப் பந்தை சிக்ஸர் அடிக்காமல் தடுத்தார்.
Krishna Satpute the tennis star had hit 5 sixes to a young bowler and on the last ball he did not hit a six as he is young bowler and he is in start of carrier🤝
Cricket is sometimes beyond game 💯 pic.twitter.com/dEnc7OS0YZ— Venky Mama (@venkymama100) March 22, 2026
அந்தப் பந்துவீச்சாளர் மிகவும் இளையவர் என்பதால், அவர் தனது வாழ்க்கையின் தொடக்கத்திலேயே 6 சிக்ஸர்கள் கொடுத்து மனமுடைந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் கிருஷ்ணா சத்புதே இவ்வாறு செய்துள்ளார். “கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அதையும் தாண்டிய ஒரு உணர்வு” என்பதை இந்தச் செயல் மீண்டும் நிரூபித்துள்ளது. இந்த நெகிழ்ச்சியான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், கிருஷ்ணா சத்புதேவின் இந்த முதிர்ச்சியான செயலுக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
