இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான செட்டேஸ்வர் புஜாரா ( 37), 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வந்தநிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

‘டெஸ்ட் சுவர்’ என புகழப்பட்ட புஜாராவுக்கு, கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகள், பாராட்டுகள் மற்றும் நன்றியை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, தனது இன்ஸ்டாகிராம் பதிவில் புஜாராவுக்கு உருக்கமான வாழ்த்து தெரிவித்தார்.

“கிரிக்கெட்டில் 4வது இடத்தில் களமிறங்கி எனது வேலையை எளிதாக்கிய புஜாராவுக்கு நன்றி. நீங்கள் மிகச்சிறந்த கிரிக்கெட் வரலாற்றை படைத்துள்ளீர்கள்,” என்று கோலி குறிப்பிட்டார்.

“உங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்ட முடிவுகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

புஜாராவின் உறுதியான ஆட்டம் மற்றும் பொறுமையான அணுகுமுறை, இந்திய டெஸ்ட் அணிக்கு பல வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளது. அவரது ஓய்வு அறிவிப்பு கிரிக்கெட் உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.