மேற்குவங்க மாநிலத்தில் காவல்துறை அதிகாரி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. உதவி சப் இன்ஸ்பெக்டரான தன்யா ராய் கடந்த புதன்கிழமை இரவு பிங்க் ரோந்து வேனில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவர் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக தெரிகிறது. அது மட்டுமில்லாமல் கூட்டத்திலிருந்த பெண்ணை காவல் அதிகாரி கட்டிப்பிடித்து முத்தமிட்டதாக தெரிகிறது.
இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. அந்த வீடியோவை பார்த்த ரிட்டிசன்கள் காவல் அதிகாரியை கடுமையாக விமர்சித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய உயர் அதிகாரிகள் காவல் அதிகாரியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
