பணியில் இருக்கும் காவலர்கள் யாரும் இணை செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் காவலர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பணியில் இருக்கும் காவலர்கள் யாரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது.
போக்குவரத்தை சரி செய்தல் மற்றும் விதி மீறல்களை கண்டறிதலில் தோய்வு ஏற்படும் என்பதை உணர்ந்து காவலர்கள் பணி நேரங்களில் கட்டாயம் செல்போனை பயன்படுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பை காவலர்கள் அனைவரும் கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டும் என்றும் அனைத்து காவல் நிலைய தகவல் பலகையில் இதை ஒட்ட வேண்டும் எனவும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
