சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என அம்மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு  முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று சென்றார்.. இதனால் முதலமைச்சர் ஸ்டாலின் எதற்காக மருத்துவமனைக்கு சென்றார் என்ற கேள்வி எழுந்த நிலையில், உடனே அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அப்போலோ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

மேலும் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு (routine health checkup) பின் நாளை, அதாவது இன்று வீடு திரும்புவார் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. எனவே இன்று முதல்வர் ஸ்டாலின் வீடு திரும்பவுள்ளார்.