தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட தக்காளி தற்போது நூறு ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மழை காரணமாக தக்காளி விளைச்சல் குறைந்துள்ளதால் தக்காளி விலை கிலோ 120 முதல் 160 ரூபாய் வரை உயர்ந்துள்ளதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மக்களின் நலனை கருத்தில் கொண்டு விவசாயிகளிடம் நேரடியாக தக்காளி கொள்முதல் செய்து இன்று முதல் சென்னையில் அனைத்து ரேஷன் கடைகளிலும் 60 ரூபாய்க்கு விற்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. சென்னையை தொடர்ந்து விரைவில் பிற மாவட்டங்களுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்துள்ளார்.