மத்தியப் பிரதேச மாநிலம் சிங்க்ரௌலி மாவட்டத்தில், விறகு சேகரிக்கச் சென்ற ஒரு ஆதிவாசி மனிதரை நிலக்கரி நிறுவனப் பாதுகாப்புப் படையினர் ஹாக்கி மட்டையால் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அன்னேலால் பைகா என்ற அந்த நபர் தனது மனைவியுடன் விறகு எடுக்கச் சென்றபோது, அவர் இரும்புப் பொருட்களைத் திருட வந்ததாகக் கூறி இந்தப் பாதுகாப்புப் படையினர் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
அந்த மனிதர் தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சியபோதும், “தலையை விட்டுவிட்டு காலில் அடியுங்கள், காலை உடையுங்கள்” என்று வீடியோ எடுத்தவர் உற்சாகப்படுத்தியது காண்போரை அதிர வைத்துள்ளது. மார்ச் 20-ம் தேதி நடந்த இந்தச் சம்பவம், தற்போது வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான பிறகே வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இது தொடர்பாக பாதுகாப்புப் பிரிவு அதிகாரி பிரதீப் படேல் மற்றும் காவலர் மகரத்வாஜ் சிங் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆதிவாசி மக்களுக்கு எரிவாயு இணைப்பு இல்லாததால் அவர்கள் சமையலுக்கு விறகையே நம்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
सिंगरौली में आदिवासी समाज के साथ सिर्फ उनकी ज़मीन छीनकर ही अन्याय नहीं किया जा रहा है, बल्कि उनके साथ अमानवीय व्यवहार भी किया जा रहा है। आप इस वीडियो में देख सकते हैं कि स्थानीय बैगा जनजाति के आदिवासी भाई के साथ किस तरह बर्बरतापूर्वक बर्ताव हो रहा है।
सवाल उठता है कि भाजपा की… pic.twitter.com/fDJJVkC7Ju
— Dr.Vikrant Bhuria (@VikrantBhuria) May 2, 2026
“>
இந்தச் சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், “ஆதிவாசி மக்களுக்கு இழைக்கப்படும் இந்த அநீதி மனிதகுலத்திற்கே அவமானம்” என்று பலரும் கொந்தளித்து வருகின்றனர்.
