மத்திய பிரதேச மாநிலம் ஷாடோல் மாவட்டத்தில் உள்ள வியோஹாரி பகுதியில் அரங்கேறிய இந்த வினோத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோபாரு பகுதியிலிருந்து மாப்பிள்ளை வீட்டாரும் உறவினர்களும் மேளதாளங்கள் முழங்க உற்சாகமாக பெண் வீட்டிற்கு வந்தனர். திருமணச் சடங்குகள் அனைத்தும் சுமுகமாக முடிந்து, மணமகன் மேடைக்கு வந்ததும் மணப்பெண்ணும் தனது தோழிகளுடன் மணமேடைக்கு அழைத்து வரப்பட்டார். ஆனால், மணமகனுக்கு மாலை இட வேண்டிய நேரத்தில், மணமகன் முகத்தை உற்றுப் பார்த்த மணப்பெண், திடீரென அதிர்ச்சியடைந்து மேடையை விட்டு கீழே இறங்கினார்.
🚨Married Shocker : Bride Rejects Groom on Stage Reason – He Doesn’t Have a Hero Face
In Bhyohari village, Shahdol, Madhya Pradesh, the bride refused to marry after seeing the groom.
She said he didn’t look like the hero shown in the photos.
She walked off the stage in… pic.twitter.com/emol9kxHI2
— Ramesh Tiwari (@rameshofficial0) May 2, 2026
தன் திருமணத்தையே மணப்பெண் பாதியிலேயே நிறுத்தியது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மணப்பெண்ணிடம் காரணம் கேட்டபோது, “நிச்சயதார்த்தத்தின் போது புகைப்படத்தில் பார்த்த மாப்பிள்ளை ஹீரோ போல மிகவும் அழகாக இருந்தார்; ஆனால் நேரில் இருக்கும் இந்த நபர் அப்படி இல்லை” என்று கூறி அதிரடியாக மறுப்பு தெரிவித்தார். புகைப்படத்தில் காட்டியது போல மணமகன் நேரில் அழகாக இல்லை என்ற காரணத்திற்காகப் பெண் வீட்டார் வற்புறுத்தியும் மணப்பெண் சம்மதிக்கவில்லை. இதனால் போலீஸ் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, இறுதியில் மணமகன் தரப்பினர் ஏமாற்றத்துடன் ஊர் திரும்பினர்.
