தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற உள்ள நிலையில், திருச்செந்தூரிலிருந்து மாநாட்டிற்கு புறப்பட்ட கட்சி தொண்டர்கள் காவல்துறையினர் மீது குற்றச்சாட்டு வைத்து காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளனர். காலை 7 மணி முதல் காவல்துறையினருக்காக காத்திருந்தும், 11 மணியைத் தாண்டியும் பாஸ் வழங்கப்படவில்லை என அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

“பல வேன்கள் காத்திருக்கின்றன, இதற்கு மேல் நாங்கள் என்ன செய்வது? சாலையில் அமர்ந்து கொள்ளவா?” என்று காணொளியில் தொண்டர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் புது மாற்றத்தை எதிர்பார்த்து, தமிழக வெற்றிக் கழக  தலைவர் விஜய் அவர்களின் பின்னால் நாங்கள் நிற்கிறோம்” என்று காணொளியில் தொண்டர்கள் உணர்ச்சி பொங்க தெரிவித்துள்ளனர்

இந்த பிரச்சினை மாநாட்டிற்கு செல்ல விரும்பும் தொண்டர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.