மதுரை அருகே பாரப்பத்தியில் நடைபெறும் தமிழகம் வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு சற்று முன்னர் பெரும் உற்சாகத்துடன் தொடங்கியது. விமர்சையாக இன்று நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் வருகை தந்துள்ள நிலையில், வெயிலையும் பொருட்படுத்தாமல் அவர்களின் உற்சாகம் சற்றும் குறைவடையாமல் இருக்கிறது. முற்றிலும் நெரிசலாக காட்சியளிக்கும் மாநாட்டு திடலில், மங்கள இசை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. விழா, மாலை 4 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், கூட்டத்தினால் மாநாடு முன்னதாகவே தொடங்கப்பட்டது.

இந்நிலையில், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி, சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று கவனத்தை ஈர்த்து வருகிறது. ‘புஸ்ஸி ஆனந்த்’ தவெக பொதுச்செயலாளர்  , ஸ்கூட்டியில் தவெக மாநாட்டை நோக்கி பயணிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. முக்கிய தலைவர் எளிமையாக  ஆனந்த்,  தவெகவின் இந்த மாநாட்டில் பங்கேற்க ஸ்கூட்டியில் வரும்   வீடியோ,   இது, பலரிடம் ஆச்சரியத்தையும், பேச வைக்கும் நேர்த்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

“>