பிரபல நைஜீரிய சமையல் கலைஞர் ஹில்டா பாசி, சமையல் உலகில் புதிய சாதனை படைத்து மூன்று முறை கின்னஸ் உலக சாதனை படைத்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். செப்டம்பர் 2025-இல் அவர் தயாரித்த 8,780 கிலோ எடையுள்ள நைஜீரிய ‘ஜோலோஃப்’ வகை சாதம், தற்போது உலகின் மிகப்பெரிய அளவிலான சாதம் என்ற புதிய கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
தொடக்கத்தில் இது ஒரு குறிப்பிட்ட வகை சாதத்திற்கான சாதனையாக மட்டுமே கருதப்பட்டது; ஆனால், கின்னஸ் நிறுவனம் இதனை ஆய்வு செய்து, ஒட்டுமொத்தமாக உலகிலேயே அதிக அளவில் சமைக்கப்பட்ட சாதம் இதுதான் என உறுதி செய்து அவருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளது.
தனது காலை நேர மின்னஞ்சல்களைப் பார்த்தபோது இந்த மகிழ்ச்சியான செய்தியைத் தெரிந்துகொண்டதாக ஹில்டா பாசி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். முன்னதாக 2023-ஆம் ஆண்டு மிக நீண்ட நேரம் சமையல் செய்ததற்காகவும், பின்னர் நைஜீரிய பாணி சாதம் சமைத்ததற்காகவும் அவர் ஏற்கனவே இரண்டு சாதனைகளைப் படைத்திருந்தார்.
இப்போது இந்த மூன்றாவது சாதனையின் மூலம், நைஜீரிய நாட்டின் பாரம்பரிய உணவை உலக அரங்கில் அவர் பெருமைப்படுத்தியுள்ளார்.
View this post on Instagram
“>
அவர் சமைத்த இந்த பிரம்மாண்டமான உணவானது, அந்தச் சமயத்திலேயே 16,600-க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
