சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ பலரது கண்களைக் குளமாக்கியுள்ளது. விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது காதலனைத் தேடி, ஒரு பெண் பதற்றத்துடன் ஓடி வரும் காட்சியே அந்த வீடியோ.

கடந்த இரண்டு நாட்களாகத் தனது காதலனைத் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்த அந்தப் பெண், இறுதியில் உண்மை அறிந்து மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

அங்கு தனது காதலனைப் பார்த்தவுடன் கண்ணீர் விட்டு அழுத அவர், “நல்ல நேரங்களில் யார் வேண்டுமானாலும் கூட இருக்கலாம், ஆனால் இது போன்ற கஷ்டமான காலத்தில்தான் நான் உன்னுடன் இருக்க வேண்டும்” என்று உருக்கமாகக் கூறுகிறார்.

அந்தப் பெண் தனது காதலனின் தாயார் முன்னிலையிலேயே, அவர் முழுமையாகக் குணமடையும் வரை உடனிருந்து கவனித்துக் கொள்வேன் என்று உறுதி அளிக்கிறார்.

எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல் மிகவும் எதார்த்தமாகப் படமாக்கப்பட்டுள்ள இந்த வீடியோ, உண்மையான அன்பிற்குச் சான்றாக அமைந்துள்ளது.

இதைப் பார்த்த நெட்டிசன்கள், “இக்காலக் கட்டத்தில் இவ்வளவு உண்மையான அன்பு கிடைப்பது அரிது” என்று அந்தப் பெண்ணைப் பாராட்டி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by OBITO • SARCASTIC CULTURE (@oc_.alpha.sp)

“>

கஷ்ட காலங்களில் கைகொடுப்பதே உண்மையான காதல் என்பதை இந்த வீடியோ மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்தியுள்ளது.