ஆப்பிரிக்க நாடான கென்யாவின் நியாஹெரா நகரில் இருந்து நியாகாச்சிற்கு பயணித்த பஸ்சில் சுமார் 50 பேர் சென்றனர். உறவினரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த அவர்கள், ககமேகா நெடுஞ்சாலையில் சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த பயங்கர விபத்தில் 10 பெண்கள் உட்பட 25 பேர் உயிரிழந்தனர். மேலும், கடுமையாக காயமடைந்த 20 பேர் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு கென்யா அதிபர் வில்லியம் ரூட்டோ தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததோடு, காயமடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்தித்துள்ளார்.
