தாய்லாந்தில் நடந்த ஒரு வினோதமான கொள்ளை முயற்சி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. சிசிடிவி காட்சிகளில், முகமூடி மற்றும் மோட்டார் சைக்கிள் ஹெல்மெட் அணிந்த ஒரு நபர், ஒரு பெண்ணின் பின்னால் இருந்து நெருங்கி, அவளது தங்க நகையை பறிக்க முயற்சித்தது பதிவாகியுள்ளது.
நகையை பறித்ததில் அவர் வெற்றியடைந்தாலும், அந்தப் பெண்ணின் விரைவான எதிர்வினையால் அவர் அதை எடுத்து செல்ல முடியவில்லை. அடுத்த நொடியில் நடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது — திருடன் தப்பி ஓடுவதற்கு பதிலாக, கைகளை கூப்பி அந்தப் பெண்ணிடம் பணம் கேட்டார்.
நடந்ததை இன்னும் புரிந்து கொள்ளாத நிலையில் இருந்த அந்தப் பெண், பயந்துபோன திருடனுக்கு 100 பாட் (தோராயமாக ரூ. 270) பணம் கொடுத்தார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகியவுடன், ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு விதமாக எதிர்வினை தெரிவித்தனர். சிலர் “சிரிக்க வேண்டுமா, அழ வேண்டுமா என்று தெரியவில்லை” என கருத்து தெரிவித்தனர்.
View this post on Instagram
“>
மற்றொருவர், “அவருக்கு நல்ல உள்ளம் இருக்கலாம், ஆனால் விரக்தியால் இதைச் செய்தார். குறைந்தபட்சம் அவர் மன்னிப்பு கேட்டது நல்லது” என்று குறிப்பிட்டார். சிலர், “திருடின பிறகே மனம் மாறியது, நல்ல உள்ளம் கொண்டவர்கள் இன்னும் உயிரோட இருக்கிறார்கள்” என பதிவிட்டனர். இந்த இரு சம்பவம் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
