டெல்லி முதல்வர் ரேகா குப்தா இன்று காலை தனது இல்லத்தில் நடைபெற்ற  பொதுக்கூட்டத்தில் தாக்குதலுக்கு உள்ளானார். புகார் அளிப்பவராக நடித்து கூட்டத்தில் நுழைந்த 30 வயது மதிக்கத்தக்க நபர், திடீரென முதல்வரை அறைந்து தலைமுடியை இழுத்ததாக கூறப்படுகிறது.

உடனடியாக பாதுகாப்புப் பணியாளர்கள் குற்றவாளியை கட்டுப்படுத்தி காவல்துறையிடம் ஒப்படைத்தனர். தாக்குதலுக்கு பின், ரேகா குப்தா மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். சம்பவ இடத்திற்குத் டெல்லி காவல்துறையின் உயர் அதிகாரிகள் விரைந்து சென்று பாதுகாப்பை அதிகரித்தனர்.

பாஜக மூத்த தலைவர் ஹரிஷ் குரானா, “இந்த தாக்குதல் அரசியல் சதியா என்பது விசாரிக்கப்பட வேண்டும்” என்றும், கட்சி சார்பில் தாக்குதலை கடுமையாக கண்டித்தார்.

“>

 

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாஜக அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, “முதல்வரின் களப்பணியை எதிர்க்கட்சிகள் பொறுத்துக்கொள்ள முடியாமல் இத்தகைய தாக்குதலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்” என்றார். அதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி, தாக்குதலைக் கண்டித்து, “ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடு, போராட்டங்களுக்கு இடமுண்டு, ஆனால் வன்முறைக்கு இடமில்லை” என தெரிவித்தார்.

குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், டெல்லி முதல்வர் பாதுகாப்பாக இருப்பார் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார். இந்த பாதுகாப்பு மீறலின் பின்னணி குறித்து டெல்லி காவல் ஆணையர் எஸ்.பி.கே. சிங் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.