தமிழக மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காகக் கடலுக்குச் செல்லும்போதெல்லாம், அவர்கள் எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது. இந்தக் கைதுகளால் மீனவர்கள் பெரும் இன்னலைச் சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 14 தமிழக மீனவர்கள், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கைதான 14 மீனவர்களும் தற்போது இலங்கை காங்கேசன்துறை முகாமில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையின் இந்தத் தொடர் அடாவடிக்கு முற்றுப்புள்ளி வைக்க உரிய தீர்வுகள் எட்டப்படவில்லை என தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது.