கடந்த சில மாதங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கத்தின் விலை, இன்று (நவம்பர் 10) மீண்டும் உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் , ரூ.11,410-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் விளைவாக, ஒரு சவரன் தங்கம் ரூ.880 உயர்ந்து, ரூ.91,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேசமயம், வெள்ளியின் விலையும் இன்று ஒரு கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.167-க்கும், ஒரு கிலோ ரூ.1,67,000-க்கும் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
