இந்தியாவில் பல மாநிலங்களிலும் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பல பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் காற்று மாசை கட்டுப்படுத்த அரசு பலகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி பயிர் கழிவுகளை எரிக்கும் விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்யுமாறு மாவட்ட நிர்வாகிகளுக்கு பஞ்சாப் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ஹரியானா மற்றும் பஞ்சாப் லிட்டர் மாநிலங்களில் எரிக்கப்படும் பயிர்க் கழிவுகளால் தலைநகர் டெல்லியில் கடுமையான காற்று மாசு ஏற்படுவது மட்டுமல்லாமல் சுவாசக் கோளாறு போன்ற பிரச்சனைகளுக்கு மக்கள் ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் கழிவுகளை எரிப்போர் மீது FIR பதிவு செய்யப்படும் என்று பஞ்சாப் அரசு எச்சரித்துள்ளது.