உலகம் முழுவதும் கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைய தொடங்கியதால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் நாடுகளுக்கு இடையே ஆன போக்குவரத்துகள் அனைத்தும் தடை செய்யப்பட்ட நிலையில் எதிர்பாராத விதமாக விமான பயணத்திற்காக புக்கிங் செய்த டிக்கெட்டுகள் அனைத்தும் கேன்சல் செய்யப்பட்டு அதற்கான பணம் திரும்ப வழங்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் மூன்று வருடங்களுக்குப் பிறகு தற்போது இது குறித்து மத்திய அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி ஆன்லைன் பயணம் தொடர்பான பல்வேறு போர்ட்டல்களுக்கு பணத்தை திருப்பி அனுப்ப அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நவம்பர் மூன்றாவது வாரத்திற்குள் இந்த தொகையை திரும்ப வழங்கும் நடவடிக்கை தொடங்க வேண்டும் எனவும் நிலுவையில் உள்ள பணத்தை பயணிகளுக்கு திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.