தலைநகர் டெல்லியின் புராரி பகுதியில், மதுபோதையில் தனது 67 வயது தாயைச் சித்திரவதை செய்து, இரவு முழுவதும் பாலியல் வன்கொடுமை செய்த மகனைப் போலீசார் கைது செய்துள்ளனர். புராரி பகுதியைச் சேர்ந்த 36 வயது நபர், கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி வீட்டில் ஏற்பட்ட தகராறில் தனது 16 வயது மகளை அடித்துத் துன்புறுத்தியுள்ளார். இதனால் அச்சமடைந்த சிறுமி, அதே பகுதியில் உள்ள தனது அத்தையின் வீட்டிற்குத் தஞ்சம் புகுந்துள்ளார்.

இதன்பின்னர், இரவு நேரத்தில் வீட்டிற்கு வந்த அந்த நபர், கடுமையாக மது அருந்தியிருந்தார். வீட்டிலிருந்த அவரது 67 வயது தாயை மகனுக்கு உணவு பரிமாற முயன்றுள்ளார். அப்போது அந்த காமவெறியன், தனது தாயின் கை, கால்களைக் கட்டிப்போட்டு இரவு முழுவதும் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அதிகாலை 4 மணியளவில் மகன் அயர்ந்து தூங்கிய பிறகு, அந்தத் தாய் தனது கட்டுகளைத் துணிச்சலாக அவிழ்த்துக்கொண்டு வீட்டிலிருந்து தப்பி ஓடினார். உடனடியாகத் தனது பேத்தியைத் தொடர்புகொண்டு நடந்ததைக் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, சிறுமி அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் அந்த நபரைக் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கும், அவரது பேத்திக்கும் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று தடயங்களைச் சேகரித்துள்ளனர்.

இதேபோன்ற மற்றொரு அதிர்ச்சி சம்பவமாக, கடந்த ஆண்டு டெல்லியின் ஹவுஸ் காஜி பகுதியில் 39 வயது நபர் ஒருவர், தனது 66 வயது தாயை இரண்டு முறை வன்கொடுமை செய்த புகாரில் கைது செய்யப்பட்டார். தனது தந்தையிடம் விவாகரத்து கோருமாறும், தாயின் கடந்த கால நடத்தையைத் தண்டிப்பதாகக் கூறியும் அந்த நபர் இக்கொடூரத்தைச் செய்திருந்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும் பெற்ற தாய்க்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.