டெல்லியில் வீணா குமாரி என்ற பெண், தனது கணவர் மற்றும் குடும்பத்தினரால் வரதட்சணை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்பதற்கு ஏழு நிமிடங்களுக்கு முன்பு, தனது சகோதரி ரீனாவிடம் போனில் பேசிய வீணா, “அக்கா, என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள், அவர்கள் என்னை அடித்துக் கொன்றுவிடுவார்கள்” என்று கதறி அழுது உதவி கோரியுள்ளார்.

மேலும், தான் இறந்த பிறகு தனது ஆறு மாத குழந்தையை கவனித்துக்கொள்ளுமாறும் உருக்கமாகக் கேட்டுக்கொண்டார். இந்த அழைப்பு துண்டிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே, வீணா மாடியிலிருந்து தவறி விழுந்துவிட்டதாக அவரது கணவர் வீட்டில் இருந்து தகவல் வந்துள்ளது.

இந்நிலையில் வீணாவின் குடும்பத்தினர் வரதட்சணை கொடுமை மற்றும் உடல்ரீதியான தாக்குதல் காரணமாகவே அவர் கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், வீணாவின் கணவர் ராஜு மற்றும் அவரது சகோதரர் ராஜ்குமார் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.