சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ, காபி பிரியர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. விலை உயர்ந்த பிராண்டட் காபி தூள் பாட்டில்களை நாம் வாங்கும் போது, அதன் தரம் மற்றும் சுவைக்காக அதிக பணம் செலுத்துகிறோம். ஆனால், அந்த பாட்டிலைத் திறந்து பார்த்தபோது வெளிவந்த உண்மை பலரையும் அதிர வைத்துள்ளது.
மேலும் வெறும் 2 ரூபாய் மதிப்பிலான காபி பாக்கெட்டுகளில் உள்ள தூளுக்கும், அதிக விலை கொண்ட பிராண்டட் பாட்டில் காபி தூளுக்கும் இடையே பெரிய அளவில் வித்தியாசம் இல்லை என்பதை அந்த வீடியோ சுட்டிக்காட்டுகிறது. வெறும் கவர்ச்சிகரமான பேக்கிங் மற்றும் பிராண்ட் பெயருக்காக மட்டுமே நுகர்வோர் அதிக விலையைக் கொடுக்கிறார்களா என்ற கேள்வியை இது எழுப்பியுள்ளது.
View this post on Instagram
“>
இந்த ஒப்பீடு பிராண்டட் நிறுவனங்களின் மீதான நம்பிக்கையை சற்று உலுக்கியுள்ளது என்றே சொல்லலாம். விலையுயர்ந்த பாட்டில்களில் அடைக்கப்பட்ட காபி தூளின் தரம், சாதாரண சில்லறை பாக்கெட்டுகளை விட எந்த விதத்தில் சிறந்தது என்பதை அந்த வீடியோ கேள்விக்குள்ளாக்குகிறது.
இது குறிப்பாக, நடுத்தர வர்க்க மக்கள் தரம் என்று நம்பி செலவழிக்கும் பணத்திற்கு ஈடான மதிப்பு கிடைக்கிறதா என்பதில் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, மக்கள் தாங்கள் வாங்கும் பொருட்களின் தரம் மற்றும் அதன் உண்மையான சந்தை மதிப்பு குறித்து சமூக வலைதளங்களில் காரசாரமாக விவாதித்து வருகின்றனர்.
