குஜராத்தின் காந்திநகர் மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவரை ஹோம்வொர்க் செய்யவில்லை என்பதற்காகக் கடுமையாகத் தாக்கிய ஆசிரியைக்கு நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. அறிவியல் ஆசிரியை பருல்பென் என்பவர் ஆத்திரத்தில் அந்த மாணவியின் இடது கன்னத்தில் பலமாக அறைந்ததில், மாணவியின் காது ஜவ்வு கிழிந்து நிரந்தரமாகக் கேட்கும் திறனை அவர் இழந்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்த ஆசிரியைக்கு 3 ஆண்டுகள் 3 மாதங்கள் சிறை தண்டனையும், 50,000 ரூபாய் அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. மாணவர்களைக் கண்டிக்க ஆசிரியர்களுக்கு உரிமை இருந்தாலும், அவர்களின் எதிர்காலத்தையே பாதிக்கும் வகையில் இத்தகைய வன்முறையில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.