வியட்நாமில் ஒரு சிறுவனுக்கு நேர்ந்த இந்த விபரீதச் சம்பவம், பெற்றோர்களைப் பதறவைப்பதோடு பெரும் எச்சரிக்கையையும் விடுத்துள்ளது. காது வலியில் துடித்த குழந்தையைச் சோதித்த மருத்துவர்கள், அதிர்ச்சியில் உறைந்து போயினர். அந்தச் சிறுவனின் காதுப் பகுதிக்குள் ஒரு சிறிய ‘ஸ்க்ரூ’ (Screw) சிக்கியிருந்தது எண்டோஸ்கோபி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஆணி காதுத் திரைக்கும் (Eardrum) மிக அருகே சென்றிருந்ததால், சிறுவனின் கேட்கும் திறனுக்கே ஆபத்து ஏற்படும் சூழல் இருந்தது. உடனடியாக மருத்துவர்கள் துரிதமாகச் செயல்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் அந்த ஆணியை வெளியே எடுத்தனர்.

​குழந்தைகள் விளையாடும்போது ஆர்வக்கோளாறில் சிறிய பொருட்களைக் காது, மூக்கு அல்லது வாயில் போட்டுக்கொள்வது வழக்கம் என்பதால், பெற்றோர்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தின் வீடியோ தற்போது வியட்நாமில் தொடங்கி உலகம் முழுவதும் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. “ஒரு நிமிடம் அசந்திருந்தாலும் அந்தப் பிஞ்சு உயிருக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கும்” என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.