லூதியானாவைச் சேர்ந்த அமித் நிஷாத் என்பவருக்கும், ஏற்கனவே திருமணமாகி இரு குழந்தைகள் உள்ள ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் விவாகரத்து கோரி விண்ணப்பித்திருந்த அந்தப் பெண், தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அமித்தை வற்புறுத்தி வந்துள்ளார்.

ஆனால் அமித் மறுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இருவரும் நேற்று லூதியானாவில் உள்ள ஒரு ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர். அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது, ஆத்திரமடைந்த அந்தப் பெண் அமித் நிஷாத்தின் அந்தரங்க உறுப்பில் கத்தியால் குத்தியுள்ளார்.

இதனால் கோபமடைந்த அமித், அந்தப் பெண்ணின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். தலைமறைவாக இருந்த அமித் நிஷாத்தைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

மேலும், அவருக்கு அந்தரங்க உறுப்பில் காயம் ஏற்பட்டிருப்பதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.