உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த விஷால் என்பவர் பேஸ்புக் மூலம் பழக்கமான ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். விஷாலின் அனுமதியின்றி அவரது செல்போனில் இருந்து அந்தப் பெண்ணின் தொலைபேசி எண்ணை அவரது நண்பர் கௌதம் எடுத்ததாக தெரிகிறது. மேலும் அவர் விஷாலின் காதலியுடன் ரகசியமாக பேசியுள்ளார்.
இதனால் கோபமடைந்த விஷால் மதுபானத்தில் விஷம் கலந்து கொடுத்து கௌதமை கொலை செய்துள்ளார். இந்த நிலையில் கௌதமின் குடும்பத்தினர் அவரை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் விஷால் கௌதமை கொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
