இந்தியாவின் சிறந்த பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து. இவர் இரு முறை இந்தியாவுக்காக ஒலிம்பிக் பதக்கம் வென்றுள்ளார். இவருக்கு தற்போது 29 வயது ஆகிறது. இந்த நிலையில் ஹைதராபாத் சேர்ந்த போசிடெக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வெங்கட தத்தா சாய் என்பவரை பிவி சிந்து திருமணம் செய்துள்ளார்.  ராஜஸ்தானில் உதய் சாகர் லேக் என்ற பகுதியில் இருக்கும் ஸினிக் ராபுல்ஸ் சொகுசு ஹோட்டலில் பிவி சிந்து திருமணம் நடைபெற்றுள்ளது.

இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது. திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு முன்னணி விளையாட்டு வீரர்கள், திரை துறையை சேர்ந்த நடிகர் நடிகைகள், அரசியல் தலைவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பி.வி சிந்துவின் திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.