கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பியில் பேருந்து டயருக்கு காற்று நிரப்பும் போது டயர் வெடித்து வாலிபர் தூக்கி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வாலிபர் பேருந்து டயரில் காற்றை நிரப்புகிறார்.

அப்போது திடீரென டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறுகிறது. அருகே நின்று கொண்டிருந்த அந்த வாலிபர் தூக்கி வீசப்பட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் வாலிபரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.