சத்தீஸ்கர் மாநிலத்தில் திருமணமான பெண்ணுக்கு மாநில அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய் மாதாந்திர தொகையை ஒருவர் நடிகை சன்னி லியோனின் பெயரை பயன்படுத்தி வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 மாதங்களாக வீரேந்திர ஜோஷி என்ற நபர் சன்னி லியோனின் பெயரை பயன்படுத்தி மாநில அரசு வழங்கும் 1000 மாதாந்திர தொகையை வாங்கியுள்ளார்.
அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சன்னி லியோனின் கணவரான நடிகர் ஜானி சின்ஸின் பெயரை பயன்படுத்தி அவர் மோசடியில் ஈடுபட்டுள்ளார். தற்போது வீரேந்திர ஜோசியின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
