கேரளாவில் இருந்து கொண்டு வந்து மருத்துவக் கழிவுகளை திருநெல்வேலியில் கொட்டிய விவகாரம் பூதாகரமாக வெடித்தது. திருநெல்வேலியில் ஏழு இடங்களில் மருத்துவ கழிவுகளை கொட்டியுள்ளனர். ஐந்து இடங்களில் முற்றிலுமாக அந்த கழிவுகளை அகற்றி கேரளாவுக்கே திருப்பி அனுப்பியுள்ளனர். தமிழக எல்லையில் கேரள காவல்துறையினர் பாதுகாப்புடன் அந்த கழிவுகள் கொல்லம் எடுத்துச் செல்லப்படுகிறது.

கேரளா அரசின் மாசு கட்டுப்பாடு வாரிய துறை சார்பில் இன்றும் மருத்துவ மற்றும் பிற கழிவுகளை அகற்றும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கேரள நீதிமன்றம் மருத்துவக் கழிவுகளை கையாளுவதில் கேரளா அரசு தோல்வி அடைந்துள்ளது என விமர்சனம் செய்துள்ளது. தமிழ்நாட்டில் கேரள மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் அந்த மாநில அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.