உலகம் முழுவதும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் ஏராளமானோர் வீடியோக்களை பதிவிட்டு, பார்வையாளர்களை கவர்கின்றனர். அதன் மூலம் குறிப்பிட்டளவு வருமானம் ஈட்டுகின்றனர். காசு பணம் சம்பாதிப்பதற்காகவே ஏதாவது ரீல்ஸ்களை எடுத்து வெளியிட்டு வருவது வழக்கம்.

அந்தவகையில் சீனாவை சேர்ந்த Zheng Xiang Xiang என்ற பெண்ணை, டிக்டாக்கில் 50 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். இவர் ஏதேனும் பொருட்கள் குறித்து 3 நொடியில் மின்னல் போல ரிவியூ செய்து வீடியோ வெளியிட்டு, வாரத்திற்கு ரூ.120 கோடி வருமானம் சம்பாதிக்கிறார்.