இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் அதீத வளர்ச்சியை அடைந்துவிட்டது. தற்பொழுது உலகம் முழுவதுமேAI தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் அதிகமாகி வருகின்றது. அதாவது மனித தேவைகளை குறைக்கும் விதமாக இந்த தொழில்நுட்பத்தின் மூலமாகவே செய்திகள் வாசிப்பது என ஏகப்பட்ட தொழில்நுட்பம் வர ஆரம்பித்துவிட்டது. ஏன் ஒருவருக்கு எப்போது மரணம் வரும் என்பதை AI மூலம் கண்டறிய முடியும்.

செயற்கை நுண்ணறிவு (AI) அனைத்துத் துறைகளிலும் ஊடுருவி மனிதர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் என்று பலரும் கருதுகின்றனர். தற்போது வெளியாகியுள்ள அமெரிக்காவின் Massachusetts Institute of Technology (MIT) ஆய்வு முடிவுகள் நிம்மதி அளிக்கும் வகையில் உள்ளது. செயற்கை நுண்ணறிவு மூலம் வேலைகளை மாற்றுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்றும், அவ்வாறு செய்வதற்கு மிகுந்த பொருட்செலவு ஏற்படும் என்றும் அந்த ஆய்வில் கூறப்படுகிறது.