தமிழக அரசியலில் தவெக-வின் எழுச்சிக்கு பின் கூட்டணிக் கட்சிகள் மாறியிருப்பது குறித்து திமுக மூத்த அமைச்சர் கே.என். நேரு காரசாரமாக விமர்சித்துள்ளார். கொள்கைக்காக எனக்கூறி கம்யூனிஸ்ட்டுகளும், பதவிக்காக விசிக மற்றும் காங்கிரஸும் விஜய்யின் தவெக-வுக்கு ஆதரவு தந்து, அங்கு அமைச்சர் பதவிகளைப் பெற்றுக்கொண்டு சென்றுவிட்டதாக அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

​இதில் குறிப்பாக காங்கிரஸைக் கடுமையாகச் சாடிய நேரு, “காங்கிரஸ் நம்மோடு இருந்தபோதெல்லாம் நமக்கு பெரிய சங்கடத்தைத்தான் தந்தது” என மேடையிலேயே வெடித்தார். ‘பாதி பேர் அமைச்சராவோம்’ என்ற விஜய்யின் ஆசை வார்த்தைகளை நம்பி, கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் அமைச்சர் பதவிக்காக தவெக-வுக்குச் சென்றுவிட்டதாக அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.