கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ வீரேந்திரா மீது, சட்டவிரோத வழிகளில் ரூ.2,000 கோடிக்கு மேல் சொத்துகள் குவித்துள்ளதாக பல்வேறு புகார்கள் எழுந்திருந்தன. இதையடுத்து, அவருக்கு எதிராக அமலாக்கத் துறை (ED) விசாரணை நடத்தியது. இந்த வழக்கில், அவர் கைதுசெய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து அவரின் சொத்துகள் மற்றும் கணக்குகள் மீது தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று (செப்டம்பர் 8) வீரேந்திராவிற்குச் சொந்தமான வங்கி லாக்கர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டன. அதில் இருந்து 27 கிலோ தங்க நகைகள் மற்றும் முக்கியமான ஆவணங்கள், கட்டுக்கட்டாக பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக இ.டி. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவருக்கு எதிரான இந்த பறிமுதல் நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.